பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கிரிக்கெட் மூலம் தாம் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை நாட்டு நலனுக்காகவே செலவிட்டு வருபவர்.
அதன் ஒருபகுதியாக சாலை வசதியற்ற கிராமங்களுக்கு சாலை அமைத்தல், புற்றுநோய் மருத்துவமனை கட்டுவது உள்ளிட்ட நற்பணிகளில் சாகித் அப்ரிடி ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் கராச்சி நகரில் செயல்பட்டு வரும் உடல் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'தாருல் சுகான்' என்ற அமைப்புக்கு சாகித் அப்ரிடி சென்றிரிக்கிறார்.
அங்கு மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுடன் சிறிது நேரம் செலவிட்ட அப்ரிடி, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுடன் பேசியும் மகிழ்ந்தார். பின்னர் அந்த மருத்துவமனையில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் நலனுக்காக 20 லட்சம் பாகிஸ்தான் பணத்தையும் நிதியுதவியாக சாகித் அப்ரிடி அளித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top