மலையாளத்தில் மெகா ஹிட்டாக ஒடிய படம் ‘பெங்களூரு டேய்ஸ்’. அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான இப்படம் மலையாளம் தாண்டி தமிழிலும் பாராட்டப்பட்ட படம். உறவு முறைகளின் ஆழத்தை மிக ஆழமாக எடுத்துச் சொல்லிய இப்படம் தமிழில் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ’அர்ஜுன், திவ்யா மற்றும் கார்த்திக்’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது.
மலையாளத்தில் துல்கர் சல்மான், நிவின் பாலி, ஃபகத் ஃபாசில், நஸ்ரியா நடித்த கதாபாத்திரங்களில் முறையே ஆர்யா, பாபி சிம்ஹா, ராணா டகுபதி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் பார்வதி நடித்த ரேடியோ ஜாக்கி கேரக்டரில் தமிழிலும் அவரே நடிப்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் நிவின் பாலியின் காதலி கேரக்டரில் வரும் இஷா தல்வார் கேரக்டரில் ராய் லட்சுமி நடிக்கிறாராம். மேலும் படத்தின் மற்றுமொரு முக்கிய கேரக்டரான நித்யா மேனன் கேரக்டரில் அவரே நடிப்பார் என சொல்லப்பட்டது.ஆனால் தற்போது அதில் தான் மாற்றம் நடந்துள்ளது.
அந்த கேரக்டரில் ஆர்யாவின் அழைப்புக்கு ஏற்ப நயன்தாரா நடிப்பார் என தகவல்கள் வெளியாகின. இப்போது அந்த கேரக்டரில் சமந்தா நடிக்க இருக்கிறார். ஆர்யா நட்பின் அடிப்படையில் அழைப்பு விடுத்த கேரக்டரில் முதலில் ஓகே சொன்ன நயன் கேரக்டரில் தற்போது ஏன் மாற்றம் ஏற்பட்டது என கேள்விகள் எழுந்துள்ளன.
இதே பாணியில் விஜய்யின் 59வது படமான அட்லி இயக்க உள்ள படத்தில் நயன்தாரா ஒப்பந்தமான கேரக்டரில் சமந்தா தற்போது நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment