ரஜினிகாந்தின் மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் சமீபத்தில் குறும்படங்களுக்காக ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்.
அந்த நிறுவனத்தின் மூலம் குறும்படங்களை வாங்கி வெளியிட இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
இது தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கம் என்றும் அந்த செய்தி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் ஐஸ்வர்யா.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் வழியில் இப்போது கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசனும் குறும்படங்களை மார்க்கெட்டிங் செய்யும் ஒரு நிறுவனத்தைத் துவங்கி இருக்கிறார்.
தன்னுடைய நிறுவனத்துக்கு ‘இசிட்ரோ’ என்று பெயரிடப்பட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.
இந்நிறுவனத்தின் மூலம் குறும்படங்கள், மியூசிக் ஆல்பங்கள், அனிமேஷன் படங்கள் ஆகியவற்றைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஸ்ருதி ஹாசன்.
அது மட்டுமல்ல, எதிர்காலத்தில் தன்னுடைய படநிறுவனத்தின் மூலம் திரைப்படங்களைத் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளாரம்!
இந்த நிறுவனம் மூலம் திறமையுள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துள்ளாராம் ஸ்ருதி ஹாசன்!
இந்த நிறுவனம் துவங்கியதற்கு ஸ்ருதியின் தந்தை கமல்ஹாசன் என்ன செநான்னாராம்?
மகளின் முயற்சிக்கு கமல் பாராட்டு தெரிவித்தாராம்.
மகளின் முயற்சிக்கு கமல் பாராட்டு தெரிவித்தாராம்.
அதுமட்டுமல்ல,’படத்தயாரிப்பு நிறுவனம் துவங்குவது பெரிய விஷயமில்லை, அதன் மூலம் நல்ல படைப்புகளை தயாரிப்பதுதான் மிக முக்கியம்’ என்றும் ஸ்ருதிக்கு அறிவுரையும் கூறினாராம் கமல்ஹாசன்!
3 படத்தில் தனுஷ் உடன் இணைந்து நடித்தபோது அவருடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக, தனுஷுக்கும் – ஐஸ்வர்யாவுக்கும் மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டு கமல், ரஜினி ஆகியோர் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணி வைத்ததாக நீண்டகாலமாகவே ஒரு தகவல் அடிபடுகிறது.
அதன் தொடர்ச்சியாக இன்னொரு தகவலும்…
அதாவது, மும்பை செல்லும்போதெல்லாம் அங்கு தனியாக வசிக்கும் ஸ்ருதிஹாசனின் ப்ளாட்டில்தான் தனுஷ் ‘தங்குகிறார்’ என்பதே அந்த தகவல்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ஆரம்பித்துள்ள அதே தொழிலை ஸ்ருதிஹாசனும் தொடங்கி இருப்பது படத்துறையில் பல்வேறு சந்தேகங்களுக்கு வழி வகுத்திருக்கிறது.
ஐஸ்வர்யாவை எரிச்சல் அடைய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னிச்சையாக முடிவு எடுத்து குறும்படங்களை மார்க்கெட்டிங் செய்யும் நிறுவனத்தை ஸ்ருதிஹாசன் தொடங்கினாரா?
அல்லது தனுஷின் ஆலோசனையின்படி தொடங்கினாரா என்று கேள்விகளையும் எழுப்பி உள்ளது.
மொத்தத்தில், ஸ்ருதிஹாசன் – தனுஷ் – ஐஸ்வர்யா தனுஷ் மூவருக்கும் இடையில் என்னமோ நடக்குது!?
0 comments:
Post a Comment