தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் மிக பிரமாண்டமாக தயாரிக்கப்படும் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் சானா எடிரெட்டி இயக்கவுள்ளார்.
14 இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிட உள்ள இத்திரைப்படம் ஐ.பி.எல். தொடரை மையமாக வைத்து தயாரிக்கப்பட உள்ளது.
இது குறித்து ஸ்ரீசாந்த் கூறுகையில், தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்படும் வகையில் இந்த படம் இருக்கும் என்றார். இதற்கு முன்னர் நடிகை பூஜா பட்டின் பொலிவுட் படமான 'கார்பெட்'டில் வில்லன் வேடத்தில் ஸ்ரீசாந்த் நடித்துள்ளார்.
முன்னதாக ஸ்ரீசாந்த் மீது விதிக்கப்பட்டத் தடையை விலக்குமாறு பி.சி.சி.ஐ அமைப்புக்கு கேரள கிரிக்கெட் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
ஆனால் அந்த தடையை விலக்க பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்திருந்தது, இந்நிலையில் ஸ்ரீசாந்த் திரைப்படத்துறையில் தடம் பதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment