கமலின் மூத்த வாரிசு என்ற மிகப்பெரிய புகழ் இருப்பினும் தனக்கான பாதையை தனி ஆளாக அமைத்துக் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். நடிப்பு மட்டுமின்றி பாடகி, இசையமைப்பாளர் என பண்முகங்கள் கொண்டவர் தற்போது தயாரிப்பாளராக அடுத்த அவதாரம் எடுத்துள்ளார்.
’இசிட்ரோ’ எனப் பெயரிடப்பட்டுள்ள இவரது புரடக்ஷன் நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக குறும்படங்கள் எடுக்கவிருக்கிறார். வித்யாசமான, அதே சமயம் கொஞ்சம் அனிமேஷன் , கிராஃபிக் சார்ந்த குறும்படங்களாக அதிகம் எடுக்க முடிவெடுத்துள்ளார்.
முற்றிலும் இளம் படைப்பாளிகளை இதற்காக தேர்வு செய்துவருகிறாராம் ஸ்ருதி ஹாசன், மேலும் இந்த படங்களுக்கு இசையமைப்பாளரும் ஸ்ருதி இல்லையாம். அதற்கும் ஆடிஷன்கள் நடந்துவருகின்றன. பிஸியாக தமிழ், தெலுங்கு, இந்தி என முன்னணி நடிகர்களுடன் நடித்துவரும் ஸ்ருதி தயாரிப்பாளராகவும் தற்போது மாறிவிட்டார்.
இந்தியில், அஜய் தேவ்கன், அணில் கபூர், தெலுங்கில் மகேஷ் பாபு, தமிழில் விஜய் , அஜித் என டாப் நடிகர்களுடன் நடித்துவருகிறார் ஸ்ருதி ஹாசன். மேலும் தனது இசை நாட்டத்தையும் விடாது தான் நடிக்கும் படங்கள் மற்றும் பிற படங்கள் என பாடல்களும் பாடிவருவது குறிப்பிடத்தக்கது.
’இஸிட்ரோ’ என ஸ்ருதி தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு வைத்துள்ள பெயர் கிரேக்க நாட்டு சொல். மேலும் இதற்கு ’கடவுளின் அன்பளிப்பு’ என பொருளாம்.
0 comments:
Post a Comment