இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடன நிகழ்ச்சியில் மேடை அனல் பறக்க நடனமாடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் முழ்கடித்தார்.
பிரபல தொலைக்காட்சி ரியாலிட்டி நடன நிகழ்ச்சியான ‘ஜலக் திக்லா ஜா ரீலோடட்’ல் இந்திய கிரிக்கெட் விளையாட்டின் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
இந்நிகழ்ச்சியின் முதல் பாகம் சமீபத்தில் ஒளிப்பரப்பட்டது. அதில் பிரபுதேவா இயக்கிய 'ரவுடி ரத்தோர்' படத்தில் இடம்பெற்ற சிண்டா தா தா என்று பாடலுக்கு இர்பான் நடனம் ஆடினார்.
இந்த புதிய முயற்சி பற்றி இர்பான் கூறுகையில், ”இந்நிகழ்ச்சி நடனமாட தெரியாதவர் நடனமாடுவது பற்றியது. இது நிச்சயமாக புதிய அனுபவமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியின் நடுவர்களாக பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், இயக்குனர் கரன் ஜோஹர், நடன கலைஞர் லாரன் காட்லீய்ப் மற்றும் நடன இயக்குனர் கணேஷ் ஹெக்டே ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
தனது சகோதரர் யூசுப் பதானுடன் இணைந்து பின்தங்கிய குழந்தைகளுக்காக சொந்த செலவில் கிரிக்கெட் அகாடமியைத் தொடங்கினார் இர்பான். இந்த ரியாலிட்டி ஷோவில் கிடைக்கும் பணத்தை தனது கிரிக்கெட் அகாடமிக்கு செலவு செய்ய உள்ளார்.

0 comments:

Post a Comment

 
Top